நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

0 3983

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

மூன்றாவது முறையாக இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் காரணமாக சோர்வு ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கோரினார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நடிகை மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments