தீயிட்டு கொளுத்தப்பட்ட சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகள்-காண்டா மிருகங்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அசாம் அரசு நடவடிக்கை
அசாம் மாநிலத்தில் காண்டாமிருகத்தின் சுமார் 2,500 கொம்புகளை அம்மாநில அரசு தீயிட்டு கொளுத்தியது.
இன்று உலகம் முழுவதும், காண்டா மிருகங்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அசாம் அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது.
காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவ குணங்கள் இல்லை என்றும், அவற்றை வேட்டையாடுவது காட்டுமிராண்டித்தனம் என்பதை உணர்த்தும் வகையிலும் கொம்புகள் எரிக்கப்பட்டதாக அசாம் வனத்துறை தெரிவித்துள்ளது.
அரசின் வசம் இருந்த சுமார் 2,500 காண்டாமிருக கொம்புகளை Bokakhat பகுதியில் பொதுவெளியில் வைத்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் எரிக்கப்பட்டன.
Comments