ஈமு கோழி மோசடி - 10 ஆண்டுகள் சிறை, ரூ. 2 கோடி அபராதம்..!
ஈமு கோழி மோசடி வழக்கில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருசாமி என்ற அந்த நபர் கடந்த கடந்த 2010 ஆம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து 2 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
ஈரோடு, நாமக்கல், கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் குருசாமி மீது புகாரளித்திருந்தனர்.
கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Comments