சென்னையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு

0 2449

சென்னையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்புதுறை உத்தரவிட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத குளிர்பானங்களை பறிமுதல் செய்யவும், தயாரிப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடைக்காரர்களும், வாடிக்கையாளர்களும் குளிர்பான பாட்டில்களில் FSSAI தரக்குறியீடு உள்ளதா, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா எனப் பார்த்து வாங்குமாறும் உணவுப் பாதுகாப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்களோ, கடைகளோ இருந்தால் முதல் முறை எச்சரிக்கையும், இரண்டாம் முறை பறிமுதலும், மூன்றாவது முறை தவறு தொடர்ந்தால் சிறை தண்டனை வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments