கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவச உடையில் காய்கறி வழங்கும் புத்த மத துறவிகள்
தாய்லாந்தில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவச உடை அணிந்த துறவிகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
புத்த மதத் துறவியான போர்ன்சாய் கொரோனா பரிசோதனை பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டிருந்த போது, பெருந்தொற்றால் பலரின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டார். அப்போதிலிருந்து அவர் சகத் துறவிகளுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறிகள், முட்டை மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு வாரமும் துறவிகள் ஒரு லட்சத்து 10,000 ரூபாய் வரை செலவிட்டு வந்த நிலையில் தற்போது ஏராளமானோர் அவர்களுக்கு நன்கொடை வழங்கத் தொடங்கி உள்ளனர்.
Comments