காவலர் பணிக்கான விண்ணப்பத்தில் ஹிஜாப் அணிந்த படங்கள் ; முஸ்லிம் பெண்கள் 1000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
மேற்கு வங்கத்தில் ஹிஜாப்பால் முகத்தை மறைக்கும் படங்கள் இடம்பெற்ற முஸ்லிம் பெண்கள் ஆயிரம் பேரின் விண்ணப்பங்களைக் காவலர் தேர்வு வாரியம் நிராகரித்துவிட்டது.
முகத்தை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த படங்களை ஒட்டியதற்காகத் தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது மதச்சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் முஸ்லிம் பெண்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
முகத்தை மறைக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றால் அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனத் தேர்வுவாரிய விதிகளில் குறிப்பிட்டுள்ளது. மதக்கண்ணோட்டத்தில் நிராகரிக்கவில்லை என்றும், பல மதத்தினரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Comments