தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்
தாய்லாந்தில் நீண்ட நாட்களாக ஓட்டப்படாமல் உள்ள டாக்சிகள் காய்கறித் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் வசித்த ஏராளமான டாக்சி ஓட்டுநர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
மேலும் பலர் டாக்சிகளுக்கு மாத வாடகை செலுத்தாததால் ஏராளமான டாக்சிகள் இயக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் ராட்சாப்ருக் (Ratchapruek) என்ற டாக்சி நிறுவனத்தில் ஒட்டப்படாமல் உள்ள 300 டாக்சிகளின் கூரைகள் மற்றும் பானெட்கள் மீது அங்குள்ள ஓட்டுநர்கள் காய்கறி தோட்டங்கள் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
Comments