கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடனில் பல்வேறு முறைகேடு - தமிழக அரசு

0 2573
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடனில் பல்வேறு முறைகேடு

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி சலுகையை முறைகேடான வழியில் பெறுவதற்கு இதுபோன்ற மோசடிகள் நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக் கணக்கில் நகைக்கடன் பெற்றது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது, வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி கடன் பெற்றது, நகைகளை வாங்காமலேயே நகைகள் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி கடன் கொடுப்பது உள்ளிட்ட வழிகளில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாமக்கல், மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து 11,33,500 ரூபாய் கடன் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments