கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனக்குழப்பம் ; அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் தகவல்
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட் நோயாளிகள் மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2020 மார்ச் முதல் மே வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகள் 150 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர்.
அதில் 73 விழுக்காட்டினர் மனக்குழப்பத்துக்கு ஆளாகித் தெளிவாகச் சிந்திக்க முடியா நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணைநோயுள்ளவர்களே இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர்கள் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியுள்ளதாகவும், குணமாகி மீள்வது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மூளையில் ஆக்சிஜன் அளவு குறைவதால் இரத்தம் உறைந்து கட்டியாகவும் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments