பைசர், மாடர்னா தடுப்பூசிகளை இந்திய அரசு வாங்க வாய்ப்பில்லை?
இந்தியாவிலேயே குறைந்த செலவிலான, எளிதில் இருப்பு வைக்கக்கூடிய தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஃபைசர், மாடர்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் வாங்கப்பட மாட்டாது என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தங்கள் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து சட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்ற இந்த நிறுவனங்களின் கோரிக்கையையும் அரசு நிராகரித்துள்ளதால் அவை இறக்குமதியாக வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.
அதே நேரம், உரிய சட்டபூர்வ வழிமுறைகளை பின்பற்றி தனியார் அமைப்புகள் இந்த தடுப்பூசிகளை வாங்கலாம் எனவும், அப்போதும், சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக பைசர் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாடர்னா தனது தடுப்பூசியை சிப்லாவுடன் இணைந்து இந்தியாவில் விற்க ஏற்கனவே அவசரகால அனுமதியை பெற்றிருந்தாலும், மைனஸ் 70 டிகிரியில் இருப்பு வைக்க வேண்டும் போன்ற பிரச்சனைகளால் அது இதுவரை சந்தைக்கு வரவில்லை.
Comments