ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக முகமது சுகைல் சாகீன் பெயரை அறிவித்த தாலிபான்
ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக முகமது சுகைல் சாகீன் என்பவரைத் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆப்கானிஸ்தானின் முந்தைய பிரதிநிதிக்குப் பதில் புதிய பிரதிநிதியாக முகமது சுகைல் சாகீன் என்பவரைத் தாலிபான் அரசு அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சின்போது தாலிபான்களின் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.
செப்டம்பர் 15 அன்று ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில் ஆப்கன் தூதர் குலாம் ஈசாக்சாய் பெயர் இடம்பெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி எழுதிய கடிதம் செப்டம்பர் 20ஆம் நாள் வந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
Comments