ஒரே குடும்ப உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் - தொகையை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

0 3888
ஒரே குடும்ப உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்

ஒரே குடும்ப உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு பெறப்பட்ட கடன் தொகையை வசூலிக்குமாறும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில், குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விதிகளை மீறி 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன்களை வசூல் செய்யவும் நகைக்கடன் தவணையை கட்ட தவறியர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments