வருவாய் ஈட்டித்தரும் டிராகன் பழ சாகுபடி
தர்மபுரி மாவட்டம் ஈ.கே.புதூரில், வறட்சிப் பகுதியில் காணப்படும் டிராகன் பழத்தை, அரை ஏக்கர் அளவில் சாகுபடி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், சுற்றுவட்டார விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஈ.கே.புதூரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோபால கண்ணன். கடந்த 2016ஆம் ஆண்டு அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 டிராகன் பழச் செடிகளை தனது வீட்டில் வைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளார். உள்ளூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப டிராகன் பழச் செடி வளரவே, தனக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் 400 செடிகளை பயிரிட்டு உள்ளார்.
ஏப்ரல் மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கி 60 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும் என்றும், தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை விளைச்சலை தரக் கூடிய பயிர் என்றும் கோபாலகண்ணன் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய், நீரழிவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோயாளிகள் உன்னக் கூடிய வகையில் பழம் இருப்பதாகவும், பழத்தை உன்பதால் உடல் சீரான நிலையில் இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மருத்துவ குணமுடைய டிராகன் பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த விவசாயம் லாபகரமாக அமையும் என்கிறார் இந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
Comments