பிரேசில் அதிபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு... சாலையோர உணவகத்தில் உணவருந்திய அதிபர்

0 2953

அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் உணவு விடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ, தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென  நியூயார்க் மேயர் Bill de Blasio அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments