அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

0 2281

அடுத்த மாதம் சுமார் 22 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க இருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளது என்றும் அக்டோபரில் 21 கோடியே 90 லட்சம் டோஸ் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா உபரித் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் சீரம் நிறுவனம் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments