ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வேட்பாளரோ, அவரது முகவரோ கட்சித் தொண்டரோ 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பறக்கும் படைகள் பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், பறக்கும் படைகள், 3 ஷிஃப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். நடத்தை விதி மீறல்கள், அச்சுறுத்தல்கள், வாக்காளர்களுக்கு பணம், மது வழங்குதல் போன்றவற்றை தடுப்பதில் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
10ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள விளம்பர தட்டிகள், மது, ஆயுதங்கள், அன்பளிப்பு எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments