500 கிராம் தங்க நகைகளுடன் மாயமான நகைப்பட்டறை ஊழியருக்கு வலைவீச்சு

0 2390
500 கிராம் தங்க நகைகளுடன் மாயமான நகைப்பட்டறை ஊழியருக்கு வலைவீச்சு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 500 கிராம் தங்க நகைகளுடன் மாயமான மேற்கு வங்கத்தை சேர்ந்த நகைப்பட்டறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜரத்தினம் தெருவில் நகைப்பட்டறை வைத்துள்ள அருண்குமார் என்பவர், கடந்த 13-ம் தேதி ஒன்றே கால் கிலோ தங்க நகையை ஊழியர் தப்பன் ரூடிதாஸிடம் கொடுத்து அதை கட்டிங் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

கடந்த 16-ம் தேதி தப்பன் ரூடிதாஸ் 500 கிராம் நங்க நகையுடன் மாயமானார். நகை பட்டறையில் தப்பன் ரூடிதாஸுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் 800 கிராம் நகைகள் மட்டுமே இருந்தன. அருண்குமார் அளித்த புகாரின் பேரில் நகையுடன் மாயமான தப்பன் ரூடிதாஸை கீழ்ப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments