ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 சதவீத கோலா கரடிகள் அழிந்துள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 சதவீத கோலா கரடிகள் அழிந்துள்ளதாக Australian Koala Foundation அமைப்பு தெரிவித்துள்ளது. வறட்சி, காட்டுத்தீ மற்றும் வளர்ச்சி காரணங்களுக்காக மனிதர்களால் அதிகரித்துள்ள காடழிப்பு நடவடிக்கைகளால் 2018-ல் 80 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கோலா கரடிகளின் எண்ணிக்கை, இப்போது 58 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோலா கரடிகளின் எண்ணிக்கை 41 சதவீதம் குறைந்துள்ள நிலையில், கோலா கரடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Comments