சீனாவில் இலையுதிர் காலம் தொடக்கம் ; வயல்களில் அறுவடை பணிகள் தீவிரம்
சீனாவில் இலையுதிர் காலம் தொடங்கியதால் வயல்களில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிஞ்சியாங் மாகாணத்தில் பருத்தி விவசாயிகள் கனரக எந்திரங்கள் மூலம் அறுவடையில் ஈடுபட்டனர்.
ஹுனான் மாகாணத்தில் இலையுதிர் காலத்தை வரவேற்கும் விதமாக பாரம்பரிய மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. பிடிபட்ட மீன்களை அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சமைத்து ருசித்தனர். யுன்செங் நகரில் எலந்த பழ அறுவடையும், குய்ச்சோ மாகண மலைப்பகுதிகளில் நெல் அறுவடையும் களை கட்டியது.
Comments