மோசமான வானிலையால் கீழே விழுந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழப்பு

0 3478

ஜம்மு காஷ்மீரில் பயிற்சியின்போது மோசமான வானிலையால் கீழே விழுந்து சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு பைலட்டுகள் உயிரிழந்தனர்.

உதம்பூர் மாவட்டத்தின் ஷிவ் கர் தார் (Shiv Garh Dhar) பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பைலட்டுகள் படுகாயமடைந்திருந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட அவர்கள், பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் கேப்டன் அந்தஸ்திலும், மற்றொருவர் மேஜர் அந்தஸ்திலும் பணியாற்றியவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தை நடந்தே சென்று அடைய ஒன்றரை மணிநேரம் ஆனதாகவும், மூடுபனியால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கடினமாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments