தேசிய ராணுவ பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
NDA எனப்படும் தேசிய ராணுவ பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் உறுதிமொழி பத்திரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை சேர்ப்பதற்கான பொருத்தமான மருத்துவ, உடல்தகுதி அளவீடுகள், பெண்களுக்கான தனிப்பட்ட கட்டமைப்பு வசதிகள், ஹாஸ்டலில் ஆண், பெண் கேடட்டுகளுக்கு இடையேயான தடுப்பு வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படுவதாக உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகாடமியில் பெண்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தீவிர ஏற்பாடுகளை செய்வதால் வரும் மே மாதம் நடக்க உள்ள என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்களும் பங்கேற்கும் நிலை உருவாகி உள்ளது.
Comments