சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீட்டை வசூல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டையும் சம்பந்தப்பட்ட குவாரி நிறுவனங்களிடம் வசூலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இன்றி சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோத குவாரிகளால் 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சுற்றுசூழல் பாதிப்புக்கான இழப்பீட்டையும் வசூலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியதோடு, வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான அரசின் திட்டமிடல் குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
Comments