கோடநாடு வழக்கில் புதிய திருப்பம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்த தினேஷ் குமார் தற்கொலை குறித்து அவரது தந்தை, சகோதரியிடம் விசாரணை

0 2521

கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றிய தினேஷ் குமார் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் 2ஆவது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை குறித்து, அவரது தந்தை போஜனிடம் நேற்று 2 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இன்று தினேஷின் சகோதரி ராதிகா, தாயார் கண்ணகி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட சூழல் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, 8 மற்றும் 9ஆவது எதிரிகளான, கேரளாவை சார்ந்த சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமி ஆகியோர், நாளை காலை உதகையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments