ஆபாச வீடியோ வழக்கு ; ராஜ் குந்த்ரா வசம் இருந்த 119 ஆபாச வீடியோக்களை கைப்பற்றியதாக மும்பை போலீஸ் தகவல்

0 4076
ஆபாச வீடியோ வழக்கு ; ராஜ் குந்த்ரா வசம் இருந்த 119 ஆபாச வீடியோக்களை கைப்பற்றியதாக மும்பை போலீஸ் தகவல்

ஆபாச வீடியோ வழக்கில் கைதாகி தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ள ராஜ் குந்த்ராவின் லேப்டாப், மொபைல் மற்றும் ஹார்டு டிஸ்குகளில் இருந்து 119 ஆபாச வீடியோக்களை கைப்பற்றியதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இந்த ஆபாச வீடியோக்களை சுமார் 9 கோடி ரூபாய் அளவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸ் கூறியுள்ள. பட மற்றும் வெப் சீரியல் வாய்ப்புகள் தருவதாக ஏமாற்றி பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் ராஜ் குந்த்ராவை போலீசார் கடந்த ஜூலை 19 ஆம் தேதி கைது செய்தனர்.

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கும், உதவியாளர் ரையான் தோர்ப்பேவுக்கும் மும்பை தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி நேற்று ஜாமின் வழங்கிய நிலையில் இன்று வீடு திரும்பினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments