இந்தியர் மீதான கட்டாய குவாரண்டைனை நீக்க வேண்டும்... பிரிட்டனுக்கு இந்தியா வலியுறுத்தல்
பிரிட்டனில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் குவாரண்டைன் பிரச்சனையை விரைவில் தீர்த்துக் கொள்வது இந்தியா- பிரிட்டன் பரஸ்பர நலனுக்கு நல்லது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக பிரிட்டன் அங்கீகரிக்காமல் இருப்பது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 4 ஆம் தேதி முதல், கோவிஷீல்டை 2 டோஸ் போட்டவர்களும் பிரிட்டனில் 10 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்கவேண்டும் என பிரிட்டன் புதிய பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூ யார்க் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் எலிசபத் டிரஸ்-உடன் இது குறித்து பேசியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையில், இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக் கொள்வது பற்றி இந்திய தரப்புடன் பேசி வருவதாக நேற்று பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments