அமேசான் வழக்கறிஞர்கள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்... சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு கோரிக்கை
இ காமர்ஸ் நிறுவனமான அமேசானின் வழக்கறிஞர்கள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர் என கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஊழலை எந்த விதத்திலும் அரசு சகித்துக் கொள்ளாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது,
அமேசானுடன் வர்த்தக இணைப்பில் உள்ள சில நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் வழக்கறிஞர் கட்டணமாக சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டதாக தகவல் வெளியானது.
இது இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கலாம் என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து, இது பற்றிய விசாரணைக்கு அமேசானும் உத்தரவிட்டுள்ளது.
நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அமேசான் விவகாரம் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு அகில இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Comments