ட்விட்டர் பதிவை திடீரென நீக்கிய சமந்தா? மாமா எனக் குறிப்பிட்டு மீண்டும் வீடியோவை ஷேர் செய்த நடிகை சமந்தா
ட்விட்டரில் நாகர்ஜூனாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நடிகை சமந்தா, அந்த பதிவை நீக்கி விட்டு பிறகு மாமனார் என குறிப்பிட்டு மறுபடியும் அதே வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
சமீபத்தில், சமூக வலைதளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை சமந்தா நீக்கினார்.
இதன் மூலம் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், தனது தந்தையின் நினைவுநாளையொட்டி, நடிகரும், நாக சைதான்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா வெளியிட்டிருந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்த நடிகை சமந்தா, மிகவும் அழகாக இருக்கிறது என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா, மிகவும் அழகாக இருக்கிறது மாமா எனக் குறிப்பிட்டு மீண்டும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
Comments