கடந்த 7 ஆம் தேதி இந்தியா வந்த CIA குழுவில் ஒருவருக்கு ஹவானா சிண்ட்ரோம்
கடந்த 7 ஆம் தேதி இந்தியா வந்த அமெரிக்க சிஐஏ இயக்குநர் பில் பர்ன்ஸ் தலைமையிலான குழுவில் ஒருவருக்கு ஹவானா சிண்ட்ரோம் என்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக CNN தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சிஐஏ இயக்குநரின் இந்திய பயண திட்டங்கள் மிகவும் பாதுகாப்பாக கையாளப்பட்ட போதும், அதை தெரிந்து கொண்டு இந்த ஹவானா சிண்டோரம் பாதிப்பை ஏற்படுத்தியது யார் என்ற கவலை அமெரிக்க அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.
ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்ட நபருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதன்முதலாக 2016 ல் கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டது. மைக்ரோவேவ் நுண்அலைகளால் தூண்டப்படும் இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்படுபவர்களுக்கு காதில் தாங்க முடியாத ரீங்கார ஒலி, தலைக்குள் அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும்.
அதனால் ஏற்படும் சோர்வும், தளர்வும் பல மாதங்கள் நீடிக்கும் எனவும் செல்லப்படுகிறது. சில அமெரிக்க அதிகாரிகளுக்கு ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டதால், சமீபத்தில் துணை அதிபர் கமலா ஹாரிசின் வியட்நாம் பயணம் சில மணி நேரம் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments