பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் கைது

0 3114

இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அனுப்பியதாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை பெங்களூருவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

காட்டன்பேட்டையில் துணி வியாபாரம் செய்யும் ஜிதேந்தர் சிங், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.க்கு ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ராணுவ நிலையம்,மற்றும் போர் வாகனங்கள் பற்றிய வீடியோக்களை அனுப்பியதாகவும் அவர்களுடன் வாட்ஸ் அப் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலில் ஜிதேந்தர் சிங்கை கைது செய்த அதிகாரிகள், செல்போன், ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments