காஷ்மீருக்குள் நுழைய தீவிரவாதிகள் தயாராக உள்ளனர்.. இந்திய ராணுவ உயர் அதிகாரி டி.பி.பாண்டே தகவல்
காஷ்மீருக்குள் நுழைவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக ராணுவ உயர்அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் போர் நிறுத்த விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறிய லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே, அதே நேரத்தில் யார் தாக்கினாலும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
எல்லைக்கப்பால் ஊடுருவல் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், பந்திப்போராவில் நடந்த ஊடுருவலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Comments