காஷ்மீருக்குள் நுழைய தீவிரவாதிகள் முயற்சி...உரி பகுதியில் இணையம், மொபைல் சேவை துண்டிப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு தயாராக இருப்பதாக வந்த தகவலையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கையாக இணையம் மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
உரி செக்டார் பகுதியில் எல்லைக் கட்டப்பாட்டு பகுதியில் இருந்து இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனை முறியடித்த பாதுகாப்புப் படையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் மொபைல் சேவைகளைத் துண்டித்துள்ளனர்.
Comments