5-11 வயது பிரிவினரிடம் தங்களது தடுப்பூசி நல்ல பலன் தருவதாக ஃபைசர், பயோன்டெக் நிறுவனங்கள் தகவல்
தங்களது தடுப்பூசி 5 முதல் 11 வயது வரை உள்ள சிறார்களிடம் கொரோனாவுக்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்புத் திறனை ஏற்படுத்துவது சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது என ஃபைசரும் பயோன்டெக்கும் தெரிவித்துள்ளன.
இந்த தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க , சோதனை முடிவுகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இந்த நிறுவனங்கள் கூடிய விரைவில் தாக்கல் செய்ய உள்ளன. 12 வயதிற்கு மேற்பட்டவர்களை விட குறைந்த டோஸ் மருந்தை 5 முதல் 11 வயது பிரிவினருக்கு செலுத்தினால் போதுமானது எனவும் அவை தெரிவித்துள்ளன.
இந்த பிரிவினரிடம் கொரோனா தொற்று அபாயம் குறைவு என கருதப்பட்டாலும், அதிக தொற்றும் திறன் உள்ள டெல்டா மரபணு மாற்ற வைரசால் அவர்கள் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஜூலை முதல் சிறார்களிடையே கொரோனா பரவல் 240 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஃபைசர் நிறுவன சிஇஓ ஆல்பர்ட் பவுர்லா தெரிவித்துள்ளார்.
Comments