ஸ்பெயினின் லா பல்மா எரிமலையில் இருந்து வெடித்து சிதறிய நெருப்பு குழம்பு குடியிருப்புகளை கபளீகரம் செய்த வீடியோ வெளியீடு
ஸ்பெயினில் வெடித்து சிதறிய எரிமலையால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. கனரி தீவில் உள்ள லா பல்மா எரிமலை, 50 ஆண்டு இடைவெளிக்குப் பின் தீ குழம்புகளைக் கக்கியது.
வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் ஆட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி ஆறாக ஓடியது. வழி நெடுக உள்ள காடுகளும், நூற்றுக்கணக்கான வீடுகளும் தீப்பிழம்புகளுக்கு இரையாகின. எரிமலை வெடிப்பதற்கு முன்பே 5000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஒருபுறம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், வெடித்து சிதறும் எரிமலையை ரசிக்க ஏராளமானோர் கனரி தீவுக்கு வரக்கூடும் என்பதால் சுற்றுலா சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ரெயெஸ் அறிவுறுத்தி உள்ளார்.
Comments