பேக்கரிக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரௌடிகள் கைது
புதுச்சேரியில் பேக்கரிக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி வீதியில் சண்முகசுந்தரம் என்பவர் சி.கே. பேக்கரி என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த எலி கார்த்தி என்ற ரௌடி அவனது கூட்டாளி மதி என்பவனுடன் நேற்று மாலை பேக்கரிக்குச் சென்று மாமூல் கேட்டு மிரட்டியுள்ளான். மாமூல் தரவில்லை என்றால் கடையை அடித்து நொறுக்கிவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதே எலி கார்த்தி கடந்த 12ஆம் தேதியும் வந்து மிரட்டிச் சென்றிருந்ததால் சண்முகசுந்தரம் சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகாரளித்துள்ளார்.
Comments