'தமது அறக்கட்டளை பணம் உயிர்களை காப்பாற்றுவதற்கானது'... ஐடி ரெய்டு குறித்து நடிகர் சோனு சூட் முதன்முறையாக கருத்து

0 4027

20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்ததாக கூறி  தமது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனைகள் குறித்து பாலிவுட் நடிகர் சோனு சூட் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமது அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் செய்த மனிதாபிமான உதவிகளுக்காக பெரிதும் போற்றப்படும் சோனு சூட் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர்.

அவரது அறக்கட்டளை18 கோடி ரூபாய் வசூலித்ததில் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வருமானவரித்துறை தெரிவித்தது. விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து சோனு சூட் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments