கம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளை எடுத்து கொரோனாவின் ஆதிமூலத்தை ஆராயும் விஞ்ஞானிகள்

0 3163

கம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து வைக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளை மீண்டும் எடுத்து கொரோனாவின் ஆதிமூலத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாதிரிகளில் காணப்படும் வைரசுக்கும் தற்போது உலகையே மிரட்டும் கொரோனா வைரசுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை கம்போடிய தலைநகரில் உள்ள ஐபிசி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் வன விலங்குகளை தாக்கியதை உறுதி செய்த அவர்கள், இந்த வவ்வால்கள் கொரோனா வைரசை சும்ப்பதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது என்றும் ஆனால் அவை நோய் தொற்றை தீவிரமாக பரப்பும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவில் வன விலங்குகளை உணவாக உட்கொள்வது, அதன் வியாபார உத்திகள், அதன்வாயிலாக பீட்டாகொரோனா வைரசுகள் பரவுவது உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆய்வு நீள்கிறது. விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களை அழிக்கும் மனிதர்களின் இயல்பு காரணமாகவே கொரோனா போன்ற அழிவு நோய்கள் உருவாவதாகவும் கம்போடிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments