போட்டியின் போது கையில் பலத்த அடி... எப்படி இருக்கிறார் அம்பதி ராயுடு? சிஎஸ்கே கோச் பதில்

0 4929

சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டியில் காயமடைந்த அம்பதி ராயுடுவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே தலைமை கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே வீசிய பந்து ராயுடுவின் கையில் பலமாக தாக்கியது. அதைத் தொடர்ந்து அவர் தரையில் விழுந்தார். அதன் பின்னர் ஆட முடியாமல் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்டீஃபன் ஃபிளெமிங், எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ராயுடுவுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை  தசைப்பகுதியில் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதைப் போன்று வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறிய அவர், இந்த 2 பேரும் விரைவில் குணமடைந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments