வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சோதனை ஓட்டம்... விநாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற சாதனை வேகம்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 5ஜி சோதனை ஓட்டத்தின்போது, விநாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற சாதனை வேகம் எட்டப்பட்டதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது 4ஜி சேவை வழங்கி வரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவை வழங்குவதற்கு தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 5ஜி சோதனை ஓட்டத்திற்கு கடந்த மே மாதத்தில் தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கியது. எரிக்சன், நோக்கியா, சாம்சங், சி-டாட் தயாரித்துள்ள கருவிகளை பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
நொடிக்கு 1 ஜிகாபிட் என்ற வேகத்தை எட்டியதாக கடந்த ஜூனில் ஜியோவும், ஜூலையில் ஏர்ட்டெல்லும் தெரிவித்திருந்தன. இந்நிலையில், புனே நகரில் 5ஜி சோதனை ஓட்டம் நடத்திய வோடஃபோன் ஐடியா நிறுவனம் விநாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற வேகத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை எட்டப்பட்ட தகவல்தொடர்பு வேகங்களில் இதுவே மிக அதிகம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments