அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் வழியாக கிடைக்கும் ஆண்டு வருவாய் 1.40 லட்சம் கோடி ரூபாயாக உயரும் - அமைச்சர் நிதின் கட்கரி
அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் வழியாக கிடைக்கும் ஆண்டு வருவாய் இப்போதுள்ள 40 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து மும்பைக்கு அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைப் பணிகளை பார்வையிட்ட பின் பேசிய அவர் இந்த நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மூலம் மட்டும் மாதம் ஆயிரம் முதல் ஆயிரத்து 1500 கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு கிடைக்கும் என்றார் அவர். அரசின் வருவாயை பெருக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு தங்கச்சுரங்கத்தை போன்றது என அவர் வர்ணித்தார்.
எட்டுவழிச்சாலையாக அமைக்கப்படும் மும்பை-டெல்லி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் வழியாக செல்கிறது. இதனால் தற்போதுள்ள பயணதூரமான 24 மணி நேரம் 12 மணி நேரமாக குறையும்
Comments