4 மாநிலங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழப்பு

0 5422

விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது 4 மாநிலங்களில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க முயன்ற ஒரு பெண் அவரது இரு மகன்கள் உள்பட 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

இதே போல் மத்தியப் பிரதேசத்தில் பிந்த், ராஜ்கர் மற்றும் சத்னா மாவட்டங்களில் 8 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருவரும் மகாராஷ்டிராவில் ஒருவரும் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது பலியாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments