ரஷ்யா நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதின் கட்சி முன்னிலை
ரஷ்யா நாடாளுமன்ற கீழவை தேர்தல் முடிவில் அதிபர் புதினின் யுனைடெட் கட்சி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவான வாக்குகளில் 35 சதவீதம் எண்ணப்பட்டு உள்ளதாகவும், அதில் புதினின் யுனைடெட் கட்சி 45 சதவீத வாக்குகள் முன்னிலை பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கெமிரோவோ மாகாணத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு முயற்சி நடந்ததாக ரஷ்ய Yabloko கட்சி வீடியோ வெளியிட்டுள்ளது. அங்கு இதுவரை 45 வாக்குசாவடிகளின் 7 ஆயிரத்து 465 வாக்குபெட்டிகளில் உள்ள ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments