ராணுவ பயிற்சி விமானம் குடியிருப்பில் விழுந்து விபத்து... 2 பேர் படுகாயம், 3 வீடுகள் சேதம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
கப்பல் படைக்கு சொந்தமான Navy T-45C Goshawk விமானத்தில் 2 ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் எதிர்பாராதவிதமாக லேக் வொர்த் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராசூட்டுடன் குதித்த ராணுவ வீரர் மின் கம்பியில் சிக்கி லேசான காயங்களுடன் தப்பியதாகவும் மற்றொரு வீரர் குடியிருப்புகளில் மேல் விழுந்து படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 3 வீடுகள் சேதமானதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments