பொதுவெளியில் சிறுநீர் கழித்த நபரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த நபர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில், வீட்டுக்கு அருகே பொதுவெளியில் சிறுநீர் கழித்த நபரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். செங்குட்டுவன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
சதூர்த்தி தினத்தன்று,கோவிலுக்குச் சென்று விட்டு வந்த ராஜேந்திரன், வீட்டுக்கு அருகே பொதுவெளியில் சிறுநீர் கழித்ததாகவும், அதற்கு பக்கத்து வீட்டுக்கரரான சீனிவாசன் தகாத வார்த்தைகளால் ராஜேந்திரனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
பதிலுக்கு ராஜேந்திரனும் பேசவே, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் மோதலாக மாறி அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜேந்திரனை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ராஜேந்திரன் 7 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.
Comments