யுரேனியம் செறிவு ஆலையை விரிவுபடுத்தும் வட கொரியா
வடகொரியா தனது அணுசக்தி வளாகத்தில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை விரிவாக்கம் செய்யும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் விண்வெளி நிறுவனம், வட கொரியாவின் யோங்பியோன் அணுசக்தி வளாகத்தில் 10,760 சதுரடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தின் உற்பத்தியை வடகொரியா 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிபுனர்கள் தெரிவித்தனர். அனு ஆயுதங்களைத் தாங்கி தொலை தூரம் சென்று தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகளை வட கொரியா சமீபத்தில் சோதனையிட்டது ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
Comments