சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த 2 இளைஞர்கள்

0 9194
சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த 2 இளைஞர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களை போலீசார் பாராட்டினர்.

தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சீனிவாசன், பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் பெரும்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்த போது , 3 சவரன் தங்கச் சங்கிலி, 1 சவரன் பிரேஸ்லெட், 2 மோதிரங்கள் கீழே கிடந்துள்ளன.

யாரோ தவறி விட்டுச்சென்றுள்ளார்கள் என்பதை அறிந்த இருவரும், நகைக்கு ஆசைப்படாமல் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments