தனக்குக் கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலம் விட உள்ளதாகப் பிரதமர் மோடி அறிவிப்பு
தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விற்க உள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதில் பங்கெடுக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியர்கள் பயன்படுத்திய விளையாட்டுக் கருவிகள் பண்பாட்டு அமைச்சகத்தின் மூலம் இணையவழியாக ஏலம் விடப்பட்டதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தனக்குக் கிடைத்துள்ள பரிசுப் பொருட்களையும், நினைவுப் பரிசுகளையும் அதேபோல ஏலம் விட உள்ளதால் அதில் பங்கேற்கும்படி மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையைக் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments