குளிப்பதை படமெடுத்து மிரட்டல்... நகை, பணம் பறிப்பு... கம்பி எண்ணும் வக்கிரன்

0 6651

நாகையில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்ததோடு, பணம், நகைகளையும் பறித்த  கொடூர இளைஞன் கைது செய்யப்பட்டான். அப்பாவி மூஞ்சியை வைத்துக் கொண்டு அநாகரீக செயல்களில் ஈடுபட்டு, பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சில்லரைப் பயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருக்குவளை அடுத்த முப்பத்தி கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா என்பவன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் எம்.ஏ.படித்து வருகிறான். இவனது வீட்டுக்கு எதிரே ஓடும் ஆற்றிற்கு குளிக்கச் செல்லும் சிறுமிகள், இளம்பெண்களை, செல்போனை மறைத்து வைத்து படமெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த பாரதிராஜா, அந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி சிலரை தனது இச்சைக்கும் இணங்க வைத்துள்ளான். ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் பாரதிராஜா, ஒரு பையில் அழுக்குத் துணியுடன் சேர்த்து செல்போனை கரையில் மறைத்து வைத்துவிட்டு, பின்னர் பெண்கள் வந்ததும் குளிக்காமல் பாசாங்கு செய்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவான் எனக் கூறப்படுகிறது. பெண்கள் குளித்து விட்டு சென்றதும் அங்கு மறைத்து வைக்கப்பட்ட தனது செல்போனில் பதிவான வீடியோக்களை வைத்து, மிரட்டுவது வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த பாரதிராஜா, அவரை மிரட்டி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதனையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பணம், நகைகளை பிடுங்கி வந்துள்ளான். ஒரு முறை பாரதிராஜாவின் செல்போனில் பல பெண்களின் ஆபாச படங்களும், வீடியோக்களும் இருந்ததை கண்டு அதிர்ந்து போன அந்த பெண், தனக்கு நேர்ந்த துயரம் இனிமேல் யாருக்கும் நடக்கக் கூடாது, கயவன் பாரதிராஜாவை சும்மா விடக் கூடாது என எண்ணி, தைரியமாக நடந்தவற்றை பெற்றோர், உறவினர்களிடம் கூறி, மேற்கொண்டு பணம் தர மறுத்துள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த அந்த கொடூரன் பாரதிராஜா, பெண்ணின் நிர்வாணப் படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைக்கும் மோசமான செயலையும் அரங்கேற்றியுள்ளான். பின்னர், ஊரை விட்டு தலைமறைவான பாரதிராஜாவை, பெண்ணின் உறவினர்களும், ஊர்பொதுமக்களும் சேர்ந்து கடந்த 7-ந் தேதி திருக்குவளை அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, செல்போனை பிடுங்கி பார்க்க முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் செல்போனை பிடுங்கி தரையில் போட்டு நொறுக்கி உடைத்துவிட்டு, பாரதிராஜா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து கல்லூரி மாணவியின் உறவினர்கள் மற்றும் முப்பத்தி கோட்டகம் கிராம மக்கள் திருக்குவளை காவல் நிலையத்தில் பாரதிராஜா மீது புகார் அளித்தனர். அதன் பேரில் பாரதிராஜாவை கைது செய்த போலீசார் சீர்காழி சிறையில் அடைத்தனர்.

ஆற்றுக்கு குளிக்க வரும் பெண்களை மட்டுமின்றி, தன்னுடன் கல்லூரியில் பயின்ற சில இளபெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி பாரதிராஜா மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சிறப்பாக கவனித்தால் இவனுக்கு பின்னால் இருக்கும் மேலும் பலர் பற்றிய விவரங்களும் தெரியவரக்கூடும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, பாரதிராஜா, பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் 2019ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய நபர் என்பதும், இவன் தேமுதிக கீழ்வேளூர் ஒன்றிய மாணவரணி பொறுப்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments