பஞ்சாபில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி..
பஞ்சாபில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த முடிவை எட்டாத நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக் உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகியதையடுத்துப் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காகக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் சுனில் ஜாக்கர், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதாகவும், அதில் ஒருமித்த முடிவை எட்டாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதிய முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய சோனியாகாந்திக்கு அதிகாரமளித்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சி நலனுக்கு எதிராக அமரீந்தர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராகுல்காந்தியைச் சந்திக்கச் சென்ற அம்பிகா சோனி, முதலமைச்சர் பதவியை ஏற்கத் தான் மறுத்துவிட்டதாகவும், சீக்கியர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
Comments