திடீரென இடிந்து விழுந்த அரசுப் பள்ளி சுற்றுச் சுவர்.. நொறுங்கிய கார்..!
சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், கார், மின்மாற்றி உள்ளிட்டவை சேதமடைந்ததோடு, ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
அசோக் நகர் புதூர் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி சுமார் 1,000 மீட்டர் சுற்றளவில் 40 வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதற்கு முன்பு 4 முறை வெவ்வேறு பகுதியில் இந்த சுவர் இடிந்து விழுந்த நிலையில், இன்று அதிகாலை 5.47 மணிக்கு 5-வது முறையாக சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் சுற்றுச்சுவர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் மின்மாற்றி அருகே அமர்ந்திருந்த ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
சுவர் இடிந்து விழுந்தது அதிகாலை நேரம் என்பதால் நல்வாய்ப்பாக உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து கார் உள்ளிட்டவற்றை மீட்டனர்.
Comments