அடேய் ரஸ்கிற்கு எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது..! வடக்கன்ஸ் வம்பால் பேக்டரிக்கு பூட்டு

0 17955
அடேய் ரஸ்கிற்கு எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது..! வடக்கன்ஸ் வம்பால் பேக்டரிக்கு பூட்டு

காரைக்குடியில் தரமற்றை முறையில் தரையில் கொட்டி ரஸ்க்குகள் தயாரித்த கம்பெனியை இழுத்துபூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். குழந்தைகள் விரும்பி உண்ணும் ரஸ்க்கிற்கு கூட ரிஸ்க் எடுக்க வைக்கும் விபரீத வட மாநில வம்பர்களால், காரைக்குடி ஓட்டல்களும் சோதனையில் சிக்கிக் கொண்டது

ஊரில் எங்கு அசைவ ஓட்டல் வைத்தாலும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவதற்காக காரைக்குடி செட்டி நாடு உணவகம் என்று பெயர் வைப்பது வழக்கம். அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த செட்டி நாடு ஓட்டல்களில் ஒன்று காரைக்குடியில் உள்ள ப்ரியா மெஸ்..!

காரைக்குடிக்கு செல்பவர்கள் தவறாமல் செல்லும் ஓட்டல்களில் ஒன்று இந்த ப்ரியா மெஸ். அங்கு இருந்துதான் கெட்டுபோன இறைச்சி , பழைய சிக்கன் , மீந்து போன புரோட்டா, ப்ரீசரில் வைக்கப்பட்டு பனிக்கட்டியான மைதாமாவு என உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் ஏராளமான உணவுகளை உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

தயார் செய்து வைக்கப்பட்டிருந்த அசைவ உணவு பொருட்கள் மூடப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதனை இலைபோட்டு மூடச் சொல்லி அறிவுறுத்திச்சென்றனர். இந்த திடீர் ஆய்வுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளை உசுப்பி விட்ட மகான்கள் வேறுயாருமல்ல ரஸ்க்கை விபரீதமான முறையில் காலுக்கடியில் போட்டு மிதித்தும், எச்சில் படுத்தியும் பேக்கிங் செய்த வட மாநில விபரீதகர்கள் தான்..!

குழந்தைகளும், வயோதிகர்களும் விரும்பி உண்ணும் ரஸ்க்கு சாப்பிடுவதே ரிஸ்க்கு என்பது போல வடக்கன்களின் வம்பு காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காரைக்குடியில் உள்ள 10 ரஸ்க் பேக்டரிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிவதாலும் சோதனையை துரிதப்படுத்தினர் உணவுப்பொருள் மற்றும் கலப்பட தடுப்புத்துறை அதிகாரிகள்.

சார்ல்ஸ் அமுல் ரஸ்க் பேக்டரிக்குள் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தரையில் ரஸ்க்குகளை கொட்டி அதனை பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து கொண்டிருந்ததை கண்ட அதிகாரிகள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்

அதே போல சுகாதாரமில்லாமல் அங்கு தட்டுக்களில் வைக்கப்பட்டிருந்த 250 கிலோ ரஸ்க்குகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொட்டினர்

தடுப்பூசி போடாமல் பணிக்கு வந்த பெண்மணியை கடிந்து கொண்ட அதிகாரிகள், அந்த ரஸ்க் பேக்டரியை இதற்கு மேலும் செயல்படவிட்டால் குழந்தைகளுக்கு ரிஸ்காகி விடும் என்பதால் அனைவரையும் வெளியேற்றி இழுத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது

மேலும் ஒரு ரஸ்க் நிறுவனத்தில் சோதனை நடத்தி சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட ரஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 8 ரஸ்க் ஆலைகளில் சோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்கெட்டில் அடைத்து வரும் உணவுகளும் உண்பவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு வினையாகி உள்ளது . ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடர மாதிரின்னு சொன்ன காலம் போய், ரஸ்க் சாப்பிடுவதே ரிஸ்க் என்றாக்கிய அந்த விபரீத வட மாநில இளைஞரை கைது செய்யும் வரை இந்த சோதனை தமிழகம் முழுவதும் தொடரும் என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments